/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_141.jpg)
ஈரோடு மகுடஞ்சாவடி ரயில் நிலையத்திற்கும்வீரபாண்டி ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி அந்த முதியவர் இறந்தது தெரியவந்தது.
இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. முதியவர் முகம் மற்றும் உடல் சிதைந்துள்ளதால்அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)