சாலை விபத்தில் ஒருவர் பலி; உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் மறியல் 

s

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணன்(71). நேற்று மாலை குருவராஜபாளையம் சாலையோரம் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் மோதியதில் கிருஷ்ணன் (71) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் உடலை மீட்க முயற்சித்த போது இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதாகவும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சாலை ஓரம் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதிதால்உயிரிழந்தார்.

இப்படி அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்து நடப்பதால், இந்தப் பகுதியில்செல்லும் அப்பாவிகள் உயிர் பலியாகி குடும்பம் அனாதையாவதால் விபத்தை தடுக்க இங்கு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது தற்போது வரை நிறைவேற்றப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இறந்த உடலை எடுக்க விடாமல் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Old man passed away in road accident

இதனையடுத்து பொதுமக்களிடம் வேப்பங்குப்பம் காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய இளைஞரைத்தேடி வருகின்றனர்.

accident
இதையும் படியுங்கள்
Subscribe