Skip to main content

சாலை விபத்தில் ஒருவர் பலி; உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் மறியல் 

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
s

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(71). நேற்று மாலை குருவராஜபாளையம் சாலையோரம் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் மோதியதில் கிருஷ்ணன் (71) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  வேப்பங்குப்பம் காவல்துறையினர் உடலை மீட்க முயற்சித்த போது இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதாகவும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சாலை ஓரம் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதிதால் உயிரிழந்தார்.

இப்படி அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்து நடப்பதால், இந்தப் பகுதியில் செல்லும் அப்பாவிகள் உயிர் பலியாகி குடும்பம் அனாதையாவதால் விபத்தை தடுக்க இங்கு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது தற்போது வரை நிறைவேற்றப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இறந்த உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Old man passed away in road accident

இதனையடுத்து பொதுமக்களிடம் வேப்பங்குப்பம் காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய இளைஞரைத் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடுப்பு கட்டை மீது பள்ளி பேருந்து மோதி விபத்து; மாணவர்கள் காயம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 School bus crashes into barricade; Students are injured

தடுப்பு கட்டையின் மீது மோதி அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பள்ளி மாணவ-மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்டன் என்ற தனியார் பள்ளி பேருந்து சுமார் 33 பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்டு நயினார் பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தத் தனியார் பள்ளி பேருந்து சின்னசேலம் அருகே குரால் கைகாட்டி பகுதியில் விருத்தாசலம் - சேலம் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கட்டை மீது தனியார் பள்ளி பேருந்து மோதி பேருந்து கவிழ்ந்தது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவ மாணவிகள் காயங்களுடன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் படுகாயங்கள் அடைந்த ஐந்து மாணவ மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ மாணவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்தத் தனியார் பள்ளியின் மீது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Next Story

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Old man gets 30 years in prison for misbehaving with girl

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியை சேர்ந்தவர் அப்துல்கனி(55) இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியராக இருந்திக்கிறார். அப்துல்கனி, 2022-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பனின் 6- வயது மகளை சாக்லெட் கொடுத்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் காட்பாடி காவல்துறையினர் அல்துல்கனியை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், அப்துல்கனி சிறையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியான நிலையில், அப்துல்கனிக்கு 30-ஆண்டுகள் சிறை தண்டனையும், 20-ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.