old man passed away in a fire accident near Sathyamangalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீரம்பாளையம், கைகோளார் தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (82). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வசந்தா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 3 மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர். வீராசாமி கைக்கோளர் தெருவில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். தந்தைக்கு 2வது மகள் மூன்று வேளையும் சாப்பாடு கொடுத்து பார்த்து வந்துள்ளார். மற்ற இரண்டு மகள்கள் அவ்வப்போது தந்தையைப் பார்த்து செலவுக்குப் பணம் கொடுத்து வந்தனர்.

Advertisment

சம்பவத்தன்று வீராசாமியின் 2வது மகள் வழக்கம் போல் சாப்பாடு கொடுக்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது வீராசாமி படுத்திருந்த மெத்தை முழுவதும் தீப்பிடித்து எரிந்து வீராசாமி உடல் கருகி இறந்து கிடப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisment

இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி பீடியைப் பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை மெத்தையில் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.