old man misbehaves with a mentally challenged woman

Advertisment

ஈரோடு பழைய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (67). இவர் கிடைக்கும் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார். நேற்று இரவு ஆறுமுகம் மது போதையில் அந்த பகுதி வழியாக சென்றபோது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அங்கு சென்று இருந்தார். அவரை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி சென்று வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஆறுமுகம் அந்த பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் ஆறுமுகத்துக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகத்தை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.