/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/06_63.jpg)
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (72). நேற்று ராமசாமி வெளியே சென்ற போது அங்கு இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுமிகளிடம் நைசாக பேச்சு கொடுத்த ராமசாமி அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது ராமசாமி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர்சிவகிரி போலீசார் ராமசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)