Advertisment

மது குடிக்க பணம் தராததால் முதியவர் எடுத்த துயரமான முடிவு!

old man lost their life because not pay for the alcohol

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (70). சாயப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். தனது குடும்பத்துடன் வசித்து வந்த லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று லட்சுமணன் வீட்டில் உள்ளவர்களிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால், வீட்டில் பணம் கொடுக்கவில்லை. இதனால் லட்சுமணன் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.

Advertisment

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் லட்சுமணனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நிலைமை மேலும் மோசம் அடைந்ததால் மீண்டும் அவரை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லட்சுமணன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

oldman liquor Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe