Advertisment

'யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு'-மாடு மேய்க்க சென்றபோது விபரீதம்

'Old man lose their live by elephant attack'- Tragedy when he went into the forest to graze cows

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர்அடுத்துள்ள எருதுகுட்டைதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதன் (60). நேற்று மாதன் கடம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வைத்தியநாதபுரத்தில் உள்ள வனப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றார்.

Advertisment

அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை திடீரென மாதனை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மதன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மாடு மேய்க்க சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி வனப் பகுதிக்குச் சென்றனர்.

Advertisment

அப்போது மாதன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கும், கடம்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe