வீட்டை விட்டுச் சென்ற முதியவர்; குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Old man drowned in drain

ஈரோடு பெருமாள்மலை பாரதிநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் நடராஜ் (60). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாயமான நடராஜை கண்டுபிடித்து தரும்படி சித்தோடு போலீசில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள படிக்கட்டில் முதியவர் பிணம் கிடப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாயமான நடராஜ் பிணமாக கிடந்ததும், அவர் காலிங்கராயன் வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நடராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode police
இதையும் படியுங்கள்
Subscribe