Advertisment

இரண்டு மனைவிகள் உள்ள கணவன் விபத்தில் இறந்தால்? அருப்புக்கோட்டையில் நடந்தது என்ன?

hk

இரண்டு மனைவிகள் உள்ள கணவன் இறந்துவிட்டால், அவன் மீதான அக்கறையோ கவலையோ யாரிடமிருந்து வெளிப்படும்? அருப்புக்கோட்டையில் என்ன நடந்தது தெரியுமா?

Advertisment

அருப்புக்கோட்டை சிலோன் காலனியைச் சேர்ந்த அம்பலம் மருதன்(வயது 65). அவருக்கு பேச்சியம்மாள் என்ற முதல் மனைவியும், பாண்டியம்மாள் என்ற இரண்டாவது மனைவியும் உண்டு. 25 வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முதல் மனைவி பேச்சியம்மாளைப் பிரிந்துபாண்டியம்மாளுடன் வாழ ஆரம்பித்திருக்கிறார் அம்பலம் மருதன்.

Advertisment

இந்நிலையில் அவர் வாகன விபத்து ஒன்றில்சிக்கி இறந்துபோனார். அருப்புக்கோட்டை டவுன்காவல் நிலைய போலீசாரிடம் முதல் மனைவி பேச்சியம்மாள்,கணவர் அம்பல மருதன் இறப்பு சம்பந்தமாகப்புகார் கொடுக்க விரும்பவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டார். அதன்பிறகு, இரண்டாவது மனைவி பாண்டியம்மாள் காவல்நிலையத்தில் ஆஜராகி புகார் கொடுத்ததன் பேரிலேயே வழக்குப் பதிவாகியுள்ளது.

accident police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe