Advertisment

காட்டுப் பன்றி கடித்து இறந்த முதியவர்..! 

The old man who died after being bitten by a wild boar ..!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ளது ஏப்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான செல்வராஜ், அதே பகுதியில் விவசாயம் செய்துவருகிறார். பொதுவாக விவசாய நிலங்களைக் காட்டுப் பன்றி மற்றும் ஏனைய விலங்குகளிடம் இருந்து காக்க, நிலத்தின் உரிமையாளர் அல்லது அவர்கள் வீட்டிலிருந்து யாரேனும் இரவு நேர கண்காணிப்புக்காக வயிலுக்குச் சென்று கண்காணிப்பர்.

Advertisment

அதுபோல், செல்வராஜும் அவரது நிலத்தைப் பாதுகாப்பதற்காக இரவு சென்றுள்ளார். அப்போது அவரது விவசாய நிலத்தில் மறைந்திருந்த காட்டுப் பன்றி, எதிர்பாராத விதமாக செல்வராஜை தாக்கியுள்ளது. அதனிடமிருந்து தப்பிக்க செல்வராஜ்ஓடியுள்ளார். இருந்தும், அந்தக் காட்டுப் பன்றி அவரை துரத்திக் கடித்துள்ளது. இதில் செல்வராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisment

Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe