Advertisment

15 வயது சிறுமியிடம் முதியவர் பாலியல் தொல்லை!

Old man arrested under POCSO Act for misbehaving with 15-year-old girl

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த, 15 வயது மாணவி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 1 சேரவுள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு மாணவிக்கு தலைவலி அதிகமானதால், அரூர் அரசு மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க செல்வதாக தனது தாயிடம் கூறி விட்டு வந்துள்ளார்.

Advertisment

அப்போது மாணவியின் தாய்க்கு பைனான்சில் கடன் கொடுத்துள்ள கீழ்மொரப்பூரைச் சேர்ந்த முருகேசன், 59, என்பவர் இரவு நேரத்தில் வெளியில் வரக்கூடாது எனவும், மாணவியை அவரது அத்தை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துள்ளார். ஆனால் மாணவி வேண்டாம் என சொன்ன போது, கட்டாயப்படுத்தி மாணவியை முருகேசன் தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

Advertisment

இதைத்தொடர்ந்து மாணவியின் அத்தை வீட்டிற்கு செல்லாமல் அருகில் உள்ள கரம்புகாட்டிற்குச் அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடமிருந்து தப்பிய மாணவி அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். மாணவி அளித்த புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர்

arrested POCSO police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe