
சிதம்பரம் அருகே 7 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த, முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜேந்திரன் (55). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவருகிறார். இவர், சம்பவத்தன்று தனது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி டிவி பார்ப்பதற்காக ராஜேந்திரனின் வீட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில், ராஜேந்திரன்அந்தச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தச் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் லட்சுமி, இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் மேரி, சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் இருவரும் போக்சோ சட்டத்தின்கீழ் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)