Skip to main content

“படிச்சி என்னத்த.. பாட்டில்தான் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்” - தலைமையாசிரியரிடம் ஆவேசப்பட்ட முதியவர்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

old man angry with school head master

 

“படிச்சி என்னத்த கிழிச்சேன்.. பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்..” என மாணவர் சங்கத்தினருக்கும் ஆசிரியருக்கும் நடந்த வாக்குவாதத்துக்கு மத்தியில், கோணிப்பையுடன் வந்திருந்த முதியவர் ஒருவர் ஆக்ரோஷத்துடன் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

 

மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி மொழி திணிப்பை அமல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இந்தி திணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, இந்திய மாணவர் சங்க அவிநாசி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட நிர்வாகி மோகனப்பிரியா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதனையறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன், பள்ளி உதவியாளர் மாதையன் ஆகியோர், மாணவர் சங்க நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தி எதிர்ப்பு பிளக்ஸ் பேனரையும் பிடுங்கி வீசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாணவர் சங்க ஒன்றிய செயலாளர் மணிகண்டனிடம், பள்ளியில் பணியாற்றும் மாதையன் என்பவர், இந்தி மொழி கற்பது தவறில்லை, மும்மொழி கொள்கை  கற்றுக் கொள்ள வேண்டியதுதானே, எனக்கு 30 மொழி தெரியும் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக வந்த  கோணிப்பையுடன் பாட்டில் பொறுக்கிக்கொண்டு இருந்த முதியவர் ஒருவர் திடீரென ஆக்ரோஷமாக பேசத் தொடங்கினார். படிச்சு என்னத்த கிழிச்சேன்.. நானும் படிச்சவன்தான்.. இப்போ பாட்டில் பொறுக்கிக்கிட்டு இருக்கேன்.. எனக் கோபமாக கூறினார். இதனை அங்கிருந்தவர் ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது. 

 

இதனிடையே பள்ளி தலைமையாசிரியர் கொடுத்த  தகவலின் படி அவிநாசி காவல் நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், மாணவர் சங்க நிர்வாகிகளை முறையாக காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்த பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கூறினார்கள். இதன்பின்பு மாணவர் சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.