Old lady passes away near erode

ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமாள் (85). இவரது கணவர் சீம்பன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். ரமாள் தனது மகன் சண்முகம் வீட்டின் பின்பகுதியில் வசித்து வந்தார். சண்முகம் தான்தாயை பராமரித்து வந்தார். ராமாளுக்கு கடந்த சில வருடங்களாக காது வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராமாளுக்கு அவரது மகன் உணவு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் காலை எழுந்து வந்து பார்த்தபோது ராமாள் விஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்த நிலையில் மயக்கத்தில் கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் உடனடியாக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ராமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment