Advertisment

எரிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி உடல்.. கணவரிடம் போலீஸ் விசாரணை 

Old lady passed away police arrested her husband questioning

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எம். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு(62). இவரது மனைவி ஞானாம்பள்(60). இவர், நேற்று அவரது வீட்டில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செல்லக்கண்ணு, மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Advertisment

அந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த மரக்காணம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானாம்பாள் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை புதுச்சேரி, கனகசெட்டிகுளம் பக்தியில் உள்ள தனியார் மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து காவல்துறையினர் அவரது கணவர் செல்லக்கண்ணுவிடம் விசாரணை நடத்தினர்.

Advertisment

அந்த விசாரணையில், தனது மனைவிக்கும் தனக்கும் நேற்று காலை வாய் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஞானாம்பாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் தானே ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதேசமயம், மருத்துவ பிரேத பரிசோதனையில் ஞானாம்பாள் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஞானாம்பாளில் கணவர் செல்லக்கண்ணுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மரக்காணம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe