
சென்னை திருவான்மியூரில் மூதாட்டி மீதுபேருந்து மோதி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை திருவான்மியூரில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய '90' எண் கொண்ட பேருந்து இன்று திருவான்மியூரில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்குத்திரும்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நடைபாதையில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த மூதாட்டி ஒருவரின் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கச் சக்கரம் மூதாட்டியின்மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பேருந்து ஓட்டுநர் முருகன்,நடத்துநர் ராசி ஆகிய இருவரையும்கைது செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்து நிலையத்தில் விபத்தாகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us