Advertisment

திருடனைத் துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி!

old lady chased away the thief with a broom

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட பலவஞ்சாத்து குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் தெருவில் செந்தாமரை என்பவர் மளிகை கடையை நடத்தி வருகிறார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மதிய நேரத்தில் கடையின் ஷட்டரை மூடிவிட்டு கடையின் உள்ளேயே ஓய்வு எடுத்திருந்துள்ளார்.

Advertisment

அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் கேடி.எம். டியோ பைக்கில் வந்து கடையின் அருகில் நிறுத்திவிட்டு மூடி இருந்த கடையின் ஷட்டரை மெல்லத் திறந்து கடையில் உள்ளே இருக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை திருட முயன்றுள்ளார்.

Advertisment

அப்போது கடையின் உள்ளே ஓய்வு எடுத்திருந்த செந்தாமரை திடீரென கடையில் ஷட்டர் திறந்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பொழுது மூடியிருந்த கடையில் உள்ளே ஒருவரை பார்த்ததும் பதட்டம் அடைந்து திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டு அருகே இருந்த துடைப்பத்தை எடுத்து அடித்துள்ளார்.

கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்ததை கண்ட திருடன் தான் வந்த பைக்கை விட்டு விட்டு தப்பித்து ஓடி உள்ளான். பின்பு கடையின் உரிமையாளர் பாகாயம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டம் பகலிலேயே மூடிய கடையில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe