Advertisment

சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்; மூதாட்டி போக்சோவில் கைது

nn

Advertisment

மாணவனுடன் முறையற்றத்தொடர்பில் இருந்த, முதியோர் இல்லம் நடத்தி வந்த55 வயதுபெண் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது கும்பகோணத்தில் நிகழ்ந்துள்ளது.

கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழி பகுதியில் சூரியகலா (55) என்பவர், முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் சிறுவனைத்தவறானமுறையில் வழிநடத்தி பாலியல் ரீதியாகத்தன்னுடைய இச்சைக்கு சூரியகலா பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

nn

Advertisment

சில நாட்களாகச் சிறுவன் உடல் சோர்வுடன் காணப்பட்ட நிலையில்,பெற்றோர் சிறுவனிடம் கேட்டபொழுது சூரியகலா தன்னைத்தவறாகப் பயன்படுத்திக் கொண்டதை மாணவன் தெரிவித்தான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் உடனடியாக மகனை மருத்துவமனையில் சேர்த்ததோடு, சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து முதியோர் இல்லத்தை நடத்தி வந்த சூரியகலாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police Kumbakonam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe