கோவை மாவட்டம், செம்மேடு அருகே வெள்ளியங்கிரி பூண்டி கோவிலுக்குச் செல்லும் வழியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண், 65 வயது மதிக்கத்தக்க பெண் ஆகிய இருவர் சடலமாகக் கிடந்தனர்.
இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்குத் தகவல் கிடைக்க, அங்குசென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றினர்.ஆலாந்துறை போலீஸ் தரப்பில் கூறுகையில், “இந்த தம்பதிஉள்ளூர்வாசிகள் இல்லை. ஆடிப்பெருக்கு என்பதால் கோவிலுக்கு வந்ததாக தெரிகிறது.இதுவரை இவர்களின் அடையாளமும், தற்கொலை செய்துகொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. புதிதாக தாலி மாற்றியுள்ளனர் என்பது மட்டும் தெரிகிறது. இதுகுறித்து விசாரித்துவருகிறோம்”என்றனர்.
வயதான தம்பதி விஷம் அருந்தி சாலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.