50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து நாளை மீண்டும் திறக்கப்பட இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து தமிழக போக்குவரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை பழைய அட்டையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ மாணவிகள் டிக்கெட் எடுக்க அவசியமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளையே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.