/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/22_82.jpg)
பழைய பென்சன் திட்டத்தில் சேர விரும்புபவர்களின் பட்டியலை நிதித்துறை சேகரிப்பதாகவும் அதற்கான சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. ஆனால்நிதித்துறையின் அந்த சர்க்குலர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள்ஒரு கட்டத்தில் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். அப்படி நிரந்தரப்படுத்தப்படும்போதுபுதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த வகையில் நிரந்தரப்படுத்தப்பட்ட ஊழியர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அப்போது அவர்கள், "பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போதே நாங்கள் பணியில் சேர்ந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படிதான் பென்சன் வழங்க வேண்டும்" என நீதிமன்றத்தை அணுகினர்.
நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பலருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி பலரின் வழக்குகள் நிலுவையிலும் இருந்து வருகிறது. இதன் டேட்டாக்களைத் தான் துறை வாரியாக அனுப்பி வைக்கும்படி நிதித்துறை சர்க்குலர் அனுப்பியுள்ளது. மற்றபடிபழைய பென்சன் திட்டத்தில் சேர்பவர்களின் விருப்பப் பட்டியலை நிதித்துறை திரட்டவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)