Advertisment

“திமுக ஆட்சியில் மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

old age pension being provided again saya Minister I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு கோட்டாட்சியர் சக்தி வேல் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், வட்டாட்சியர் முத்து முருகன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தனுஷ் கோடி, ஒன்றிய செயலாளர்கள் ராமன், பிள்ளையார்நத்தம் முருகேசன், முன்னால் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் உலக நாதன் வரவேற்றுப் பேசினார்.

Advertisment

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த திமுக ஆட்சியின் போது ஏழை முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகையை அதிமுக அரசு நிறுத்தி விட்டது. 10 வருடங்களாக அவர்களால் முதியோர் உதவித் தொகை பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் செலுத்தாமல் உள்ளார்கள் அவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

old age pension being provided again saya Minister I. Periyasamy

இதுதவிர ஆத்தூர் ஒன்றியத்தில் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் வரை ஊதியம் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான மக்கள் நலனுக்கான குறிப்பாக பெண்ணினத்தை முன்னேற்றும் வகையிலும் அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையிலும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், தட்சினாமூர்த்தி, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் பிரவீனா, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கள் விவேகானந்தன். பஞ்சம்பட்டி மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் வாஞ்சி நாதன், கணேசன், ஆத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலமரத்துப்பட்டி ராஜேந்திரன், அகரம் பேரூரா ட்சி ஆட்சி தலைவர் நந்த கோபால் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment
i periyasamy Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe