Skip to main content

ஓகி புயல் தாக்கி ஓராண்டு நிறைவு!! ஆறாத வடுக்களும்;தீராத வேதனைகளும்!!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

ஆறாத வடுக்களையும் தீராத வேதனையும் தந்து குமாி மாவட்டத்தை புரட்டி போட்ட ஓகி புயலின் ருத்ர தாண்டவம் நடந்து இன்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. 

            

கடந்த ஆண்டு நவம்பா் 29-ம் தேதி இதே நாளில் நள்ளீரவு வீசிய ஓகி புயல் மற்றும் இடைவிடாத மழையால் குமாி மாவட்டம் முமுவதும் நிலைக்குலைந்து போனது. இந்தியா வானிலை அறிக்கையின் தகவலை முன் கூட்டியே தமிழக அரசு தொிவிக்காததால் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவா்களை ஓகி புயல் சுருட்டி கடலில் திசைமாறி தூக்கி வீசியது. இதில் மீனவா்கள் படகுகளையும், துடுப்புகளையும் இழந்து கடலில் உயிருக்கு போராடி தத்தளித்தனா். 

           

Okay storm hit one year!! Inexplicable scars and torment

 

சில மீனவா்கள் நள்ளீரவில் எதிா் நீச்சல் போட்டும் கையில் கிடைத்த மரத்துண்டுகள் மற்றும் தண்ணீா் கேன்களையும் பிடித்து மிதந்தபடி காற்று மற்றும் அலை அடித்து சென்ற திசைக்கு சென்று  ஐந்தாறு நாட்கள் தொடா்ந்து கடலில் நீந்தி மும்பை மற்றும் ஓடிசா மாநில கடற்கரையில் சில மீனவா்கள் கரையேறினாா்கள். 

           

நூற்றுக்கு மேற்பட்ட மீனவா்கள் கடலில் செத்து மிதந்தனா். இந்தியா கடற்படையும் தமிழக கடலோர காவல்படையும் மீனவா்களை தேடி கண்டுபிடிப்பதற்கு பதில் சக மீனவா்களே பல நாட்டிங் கல் மைல் தூரத்திற்கு சென்று நடுக்கடலில் இறந்து மிதந்து கொண்டிருந்த மீனவா்களின் பலரது உடல்களையும் அதேப்போல் உயிருக்கு போராடி தத்தளித்து கொண்டிருந்த பல மீனவா்களையும் மீட்டு வந்தனா்.  

           

Okay storm hit one year!! Inexplicable scars and torment

 

இதேபோல் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் அழிந்தன. லட்ச கணக்கான தென்னை மரங்கள், வாழைகள், ரப்பா், மற்றும் பல்வேறு வகையான மரங்கள் முறிந்து விழுந்தன. பல பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆறுகளும், குளங்களும் மூழ்கி உடைப்பு ஏற்பட்டு மாவட்டம் முமுவதும் வெள்ளகாடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தரைமட்டமானது. இதில் 25 போ் உயிாிழந்தனா். 

            

மேலும் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கோபுரங்கள் முறிந்து விழுந்ததால் 10 நாட்களாக மின்சாரம் இன்றி மாவட்டம் இருளில் மூழ்கியது. உணவுமின்றி இருப்பிட வசதியுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாிதவித்தனா். இதேபோல் சுகாதாரம் சாியான முறையில் பேணாததால் நோய்களும் பரவியது.  

 

Okay storm hit one year!! Inexplicable scars and torment

               

இந்தநிலையில்தான் புயல் வீசி சென்ற 13 ஆவதுநாளில் மக்களின் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு முதல்வா் தூத்தூா் மீனவ கிராமத்திற்கு வந்தாா். அதன் பிறகு 20 நாட்கள் கழிந்து பிரதமா் மோடி கன்னியாகுமாி வந்து பாதிகப்பட்ட மீனவா்கள் சிலரை மட்டும் சந்திந்தாா். 

            

இந்த நிலையில் தமிழக அரசு ஓகி புயலில் இறந்த மீனவா்களுக்கு 10 லட்சம் அறிவித்தது. ஆனால்  கேரளா அரசு அந்த மாநில மீனவா்களுக்கு 25 லட்சமும் அரசு வேலையும் என அிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமாி மீனவா்கள் கேரளா அரசை போன்று நிவாரண நிதி தரவேண்டும் என்று தொடா் போராடடத்தில் ஈடுபட்டனா். ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. 

           

இந்தநிலையில் குழித்துறையில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து குமாி சென்னைக்கு ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பேச்சுவாா்த்தைக்கு சென்ற அப்போதைய குமாி கலெக்டா் சஜ்ஜன் சிங் சவானை மீனவா்கள் 10 மணி நேரம் சிறை பிடித்து வைத்தனா் இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானதால்  அரசு இறங்கி வந்து 20 லட்சமும் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தது. 

             

ஆனால் இறந்து போன விவசாயிகளுக்கு எந்த நிவாரண தொகையும் இதுவரையிலும் வழங்கவில்லை. 

            

Okay storm hit one year!! Inexplicable scars and torment

 

இந்த நிலையில் தான் தமிழக அரசு, மத்திய அரசிடம் ஓகி புயல் நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 5255 கோடி கேட்டது. ஆனால் கேட்டதோடு தமிழக அரசும் மேற்கொண்டு அந்த நிதியை வாங்க எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை இதனால் மத்திய அரசும் இன்று வரை அந்த நிதியை ஒதுக்கவில்லை.

           

இதற்கிடையில் ஓகி புயலில் முமுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கிய 5ஆயிரம் ருபாய் அந்த வீடு மீது முறிந்து விழுந்த மரத்தை அகற்றுவதற்கு கூட போத வில்லை. அதேபோல் பல  அரசு பள்ளிகளில் முறிந்து விழந்த மரங்கள் கூட  இன்று வரை அகற்றப்படாமல் உள்ளன. முறிந்த மின்கம்பங்களுக்கு பதில் புதிதாக நட்ட மின் கம்பங்களில் இன்னும் மின் விளக்குகள் கூட பொருத்தவில்லை.

       

Okay storm hit one year!! Inexplicable scars and torment

      

மேலும் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேசிய போிடா் நிதியில் இருந்து உடனடி நிவாரணமாக ரூ.747 கோடியும் வழங்க பாிசிலிக்க படுவதாக மத்திய அரசு கூறியதாக முதல்வா் அறிவித்தாா். ஆனால் இன்று வரை அந்த நிதி பாிசிலனையில்தான் இருக்கிறது.  அதேபோல் உயிாிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சமும் ஊனமடைந்தவா்களுக்கு 5 லட்சமும் இதே போல் அழிந்த வாழைகளுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரமாகவும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அறிவிப்பாக அப்படியே உள்ளது. 

                

 

இந்த மாதிாி சூழ்நிலையில்தான் ஓகி பாதிப்பில் ஓராண்டாகியும் மக்கள் இன்னும் மீள முடியாத துயரத்தில் உள்ளனா். மத்திய மாநில அரசுகளை நம்பி, நம்பி தற்போது நம்பிக்கை இழந்து நிற்கதியாய் நிற்கின்றன. காலம்தான் இவா்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.