தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று (06/03/2019) காவல்துறை ( இரண்டாம் நிலை காவலர் பணி ), சிறைத்துறை (இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் ), தீயணைப்பு துறையின் காலியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியீட்டது. இதற்கான இணைய வழி விண்ணப்பம் தொடங்கும் நாள் 08/03/2019 (காலை 10.00 மணி முதல் தொடங்கும் )
இணையதள முகவரி : www.tnusrbonline.org
விண்ணப்பிக்க இறுதி நாள் : 08/04/2019 .
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 130 இணைய வழி பண பறிமாற்றம் (Net Banking , Credit card, Debit card , Rupay Card , SBI e- challan) மூலம் செலுத்த வேண்டும். மேலும் வரைவு காசோலை, அஞ்சல் காசோலை ஏற்றுக்கொள்ள மாட்டாது என தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் அம்முறையில் பணம் செலுத்தப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எழுத்து தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்தது. இது தொடர்பான மேலும்b விபரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணைய தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
பி .சந்தோஷ் , சேலம் .