சாலையில் கொட்டிய ஆயிலால் அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்த சம்பவம் சென்னையில் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் நோக்கி அடையாளம் தெரியாத லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியில் இருந்த ஆயில் அதிகளவில் சாலையில் கொட்டியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் கொட்டிய ஆயிலால் சறுக்கி விழுந்தன. இதனால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்த விபத்தில் சிக்கிய ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை போக்குவரத்து போலீசார் சாலையை சரி செய்தனர். அதே சமயம் ஆயில் படிந்த சாலையில் மண்ணைபரப்பி தூய்மைப் பணியாளர்கள் சாலையை சீரமைத்தனர்.