Advertisment

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று (22ஆம் தேதி) எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. அதேபோல், சென்னை மாநகராட்சி ஆணையர் பச்சையப்பன் கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.