Officials vacate and seal Sasikala Pushpa government residence Delhi

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதிக்கு அருகே உள்ள அடையல் என்ற கிராமத்தில்சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சசிகலா புஷ்பாவிற்கு, அதிமுக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட நட்பால்அதிமுகவில் சேர்ந்தார். அதன்பிறகு அதிமுகவில் சேர்ந்த குறுகிய காலத்திலேயேயாரும் எதிர்பார்க்காத வகையில்வளர்ச்சி அடைந்தார்.

Advertisment

அதிமுக மகளிரணிச் செயலாளர், தூத்துக்குடி நகர மேயர் பதவி எனக் கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாக இருந்து வந்தது. இதனிடையேஅதிமுக தலைமையின் நெருக்கம் ஏற்பட்டதன் காரணமாக2014 ஆம் ஆண்டு மேயராக இருக்கும் போதே ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சசிகலா புஷ்பாவிற்கு அதிமுகவில் எந்த அளவுக்கு செல்வாக்கும்வளர்ச்சியும் இருந்ததோ அதே அளவுக்கு பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை அறைந்தார் என மாநிலங்களவையில் நின்று கொண்டு சசிகலா புஷ்பா சொல்லிய ஒற்றை வார்த்தைஇந்தியா முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது. அதன்பிறகுபல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிகலா புஷ்பாவைஅதிமுக தலைமை அக்கட்சியில் இருந்து நீக்கியது.

ஜெயலலிதா இறந்த பிறகுபாஜக கட்சியில் சேர்ந்த சசிகலா புஷ்பாதற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில்ராஜ்யசபா எம்.பியாக சசிகலா புஷ்பா தேர்வு செய்யப்பட்ட போதுஅவருக்கு டெல்லியில் தங்குவதற்காகமத்திய அரசால் நார்த் அவென்யூவில் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால்அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசுகுடியிருப்பை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும்படிஅரசு சார்பில் சசிகலா புஷ்பாவிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தற்போது பதவியில் இருக்கும் அதிமுக எம்.பி விஜயகுமார்டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

இதனிடையேஅவரது வீட்டில் அடிக்கடி மது விருந்து நடப்பதாகவும்இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் அளித்து வந்தனர். ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத சசிகலா புஷ்பாஅரசு குடியிருப்பைகாலி செய்யாமல் இருந்ததால்அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள்வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம்சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.