Advertisment

தங்கக்காசு என்றதுமே குவிந்த மக்கள்... பரிசு பொருட்களை வழங்கிய அதிகாரிகள்!

Gold for corona vaccinated people

Advertisment

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் பெயர் பட்டியல்களைக் கொண்டு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் கரோனாதடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. அதில் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் கிருபாகரன், வர்த்தகர் சங்கத் தலைவர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினர்.

இதில், முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயத்தை முருகானந்தம் பெற்றார். இரண்டாவது பரிசாக ஒரு கிராம் வெள்ளி நாணயத்தை ராஜ்குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் பெற்றனர். மூன்றாவது பரிசாக பட்டுப்புடவையை லட்சுமியும், நான்காவது பரிசாக செல்ஃபோனை மாலதியும், ஐந்தாவது பரிசாக பள்ளி பேக்கை விக்னேஷ் என்பவரும் உமாராணி என்பவரும் ஆறாவது பரிசாக ஆவி பிடிக்கும் இயந்திரத்தை மேகராஜ், கார்த்திகா, தேவி, வெங்கடேஸ்வரன் ஆகியோரும் பெற்றனர். இப்படி தங்கக் காசு மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படும் என்று அறித்த உடனேயே ஒவ்வொரு மையத்திலும் தேர்தலுக்கு ஓட்டு போட மக்கள்வருவதுபோல் வந்து வரிசையில் நின்று கரோனா தடுப்பூசியை போட்டுச் சென்றனர்

vaccination camp dindugal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe