புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூர் கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன்(22) தனது நண்பர்களுடன் 20 கி.மீ தூரத்தில் ஓடும் தஞ்சை மாவட்டம் ஈச்சன்விடுதி 40 கண் பாலத்தில் குளிக்கச் சென்றுள்ளார். செவ்வாய் கிழமை மதியம் ஆற்றில் குதித்தவர்களின் மணிகண்டன் சுழலில் சிக்கிக் கொண்டுள்ளார். மணிகண்டன் சுழலில் சிக்கிக்கொண்டார் என்றதகவலை மீட்புக்குழுவினருக்குகொடுத்தனர்.

kallanai

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

உறவினர்கள் வந்து தேடினார்கள். மீட்புக்குழுவினரும் மாலையில் வந்து தேடினார்கள் கிடைக்கவில்லை விடிந்து பார்க்கலாம் என்று சென்றவர்கள். புதன் கிழமை காலை 10 மணி வரை எந்த அதிகாரியும் வரவில்லை. இரவெல்லாம் ஆற்றுக்கரையில் காத்திருந்த உறவினர்கள் மீட்புக்குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தும் பயனில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை.

அதனால் ஆற்றங்கரையில் திரண்ட உறவினர்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி சாலையில் ஆவணம் கிராமத்தில் திடீர் சாலைமறியலில் அமர்ந்தனர். இதனால் இருபக்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 4 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தபட்டது.

kallanai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

kallanai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நீண்ட நேரத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் போலிசார் அங்கு வந்து சமாதானம் செய்தனர். ஆனால் சடலம் மீட்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மீட்புக்குழுவினர் வரும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று உறுதியாக அமர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அதன் பிறகு மறியல் கைவிடப்பட்டது. தீயணைப்பு வாகனம் சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் முன்பே ஈச்சன்விடுதி முக்கனிப்பாலம் அருகே செருவாவிடுதி செல்லும் வாய்க்காலில் சடலம் ஒன்று உருண்டு போவதைக் கண்ட பொதுமக்கள் மீட்டனர். அது நேற்று சுழலில் சிக்கிய மணிகண்டன்உடலாக இருந்தது. அதிகாரிகள் துணை கிடைக்காமல் தவித்த உறவினர்கள் தாங்களே சடலத்தை மீட்டனர்.

kallanai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அதிகாரிகள் அபாயமான இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் மணிகண்டனின் உறவினர்கள்.