ADVERTISEMENT

''உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளின் பதவிகளை பறிக்க வேண்டும்'' - நீதிமன்றம் அறிவுறுத்தல்!

05:54 PM Dec 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளின் பதவிகளைப் பறிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் பழைய இரும்புகளை விற்பனை செய்யும் தொழில் செய்துவரும் இருவர், அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாகச் சென்னை மாநகராட்சி அறிவித்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இரு தனிநபர்களும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில், அந்த இடத்தில் காலம்காலமாக இருந்துவருவதால் அந்த இடத்தை எடுத்துக்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் அனுமதி கொடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும் என்றும், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற நிலையில் இருந்தால் கூட அவர்களது பதவிகள் பறிக்கப்பட வேண்டும். அபராதம் விதிப்பது இரண்டாவது கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளின் பதவிகளைப் பறிப்பதோடு சிறையில் தள்ளுவதை முதற்கட்ட நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும் என மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்ததோடு, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT