சென்னை கீரின்வேஸ் சாலை ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியில் கட்டிடங்களை அப்புறப்படுத்த இன்று அரசு அதிகாரிகள் காவல்துறையினருடன் வந்தனர். இதனால், பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சம்மதிக்காததால், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். அப்போது, திடீரென அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூவத்தில் குதித்தார். உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டனர்.

Advertisment