Skip to main content

பாரதியார் இல்லத்தில் அரசியல் செய்யும் அதிகாரிகள்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 மகாகவி பாரதியார் தன் கடைசி நாட்களில் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கோயில் யானையால் தாக்கப்பட்டு சிகிச்சை எடுத்த வந்த அவர், இந்த வீட்டில்தான் 1921 செப்டம்பர் 11ந் தேதி மரணத்தைத் தழுவினார். பாரதி வாழ்ந்த அந்த இல்லம், தமிழக அரசால் அவரது நினைவில்லமாக 93-ல் மாற்றப்பட்டு, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது. 

 

barathi

 

இந்த இல்லத்தில் இருக்கும் அரங்கம், இலக்கியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கும் விடப்படுகிறது. இதன்படி இங்கு எத்தனையோ கலை இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தநிலையில் ’சென்னை முத்தமிழ்ச்சங்கத்தினர்’ தங்கள் அமுதசுரபி அறக்கட்டளை சார்பில்,100 கவிஞர்கள் பங்கேற்கும் ஒரு மெகா கவியரங்க நிகழ்வை அங்கே நடத்த முடிவெடுத்தனர். இதற்கான இசைவை, அறக்கட்டளை நிர்வாகி பாவலர் ஞானி, பாரதியார் நினைவில்லக் காப்பாளர் கிருஷ்ண மூர்த்தியிடம்  பெற்றார். இதற்கான முன்பணத்தையும் கொடுத்து, ஏப்ரல் 21-ந் தேதி விழாவை நடத்த இடத்தைப் பதிவுசெய்தார். 

 

இந்தநிலையில் இல்லக் காப்பாளர் அமுதசுரபி அறக்கட்டளை நிர்வாகிகளிடம், நீங்கள் நடத்தும் விழாவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்று விசாரித்திருக்கிறார். அதற்கு நிர்வாகிகள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றனர். 

 

இதைக்கேட்ட இல்லக் காப்பாளர்‘வைரமுத்து தி.மு.க. ஆதரவாளர் ஆச்சே... அதனால் நீங்கள் இங்கே விழாவை நடத்த அனுமதிக்க முடியாது” என்று கறாராக மறுத்துவிட்டார்.  அதோடு விழா விதிமுறைகளை பின்பற்றமுடியாததால், இங்கே  நாங்கள் விழாவை நடத்த விரும்பவில்லை என்று பாவலர் ஞானியிடம் வற்புறுத்தி எழுதி வாங்கிக்கொண்டு, வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். விழா நடக்க  இரண்டே நாட்கள் இருந்த நிலையில், இப்படி திடீரென விழாவிற்கு அடாவடியாக இடம்தர மறுத்திருக்கிறார் இல்லக் காப்பாளர்கிருஷ்ணமூர்த்தி  இதனால் திகைத்துப்போன நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அரக்கபரக்க ஓடி, அருகில் இருந்த ராமானுஜர் திருமண மண்டபத்தைப் பிடித்து, அந்த மெஹா கவியரங்க நிகழ்வை சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறார்கள்.

 


வைரமுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாரதி இல்லப் பொறுப்பாளர் இடம் தர மறுத்திருப்பது, இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  
 


.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.