தென்காசி மாவட்டம் சுரண்டை நகரம் அருகிலுள்ள ஆனைகுளத்தின் சாலையில் ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் இளம்பெண் ஒருவர் உள்ளே சென்றிருக்கிறார். அப்போது அந்த அலுவலகத்திற்குள் ஊராட்சி ஊழியரான கந்தன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இருந்திருக்கிறார். அந்தப் பெண் உள்ளே சென்ற உடன் அலுவலகத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

Advertisment

 Officers misused the Panchayat Office

இதனைப் பார்த்த ஒருவர் ஊருக்குள் தகவல் சொல்ல, கிராம மக்கள் அங்கு வரத்தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீ உள்ளேயே இரு வெளியில் ஆட்கள் இருக்கிறார்களை என பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வெளியே வந்துள்ளார். வெளியில் வந்தவுடன் பொது மக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நைசாக அலுவலகத்தின் கதவைப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டு கிளம்பிவிட்டார்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அலுவலக ஊழியரை செல்லில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், சுரண்டை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வந்த பின்பு ஊராட்சி அலுவலகத்தைத் திறந்த சமயம், பூட்டிய அறைக்குள் இருந்த 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் வெளியே வந்தார்.

அரசு அலுவலகத்தில் தவறாக நடந்து கொண்ட அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோஷ மிட்டனர். இது தொடர்பாக யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அந்தப் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்துச் சென்றார். பூட்டிய அரசு அலுவலக அறைக்குள்ளிருந்து இளம் பெண் மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

CAB