Advertisment

“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க அதிகாரி நியமிக்கப்படுவார்” - ஐ.ஜி. பேட்டி!

publive-image

மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள வே. பாலகிருஷ்ணன், திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று (04.06.2021) பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தற்போது மத்திய மண்டல அளவில் பணியாற்றக்கூடிய காவலர்கள், 20 சதவீத சுழற்சி அடிப்படையில் அவர்களுக்குப் பணி வழங்கப்படுகிறது.

Advertisment

ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து பல குற்றங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவோதெரியப்படுத்த வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

மத்திய மண்டலத்தில் இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் திருப்பி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். “மத்திய மண்டலத்தில் இதுவரை 156 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe