Advertisment

லஞ்சம் கேட்ட அதிகாரி.. கையும் களவுமாகப் பிடித்த ஊழல் தடுப்புப் பிரிவினர்..!

Officer who asked for bribe Anti-corruption unit who was caught

Advertisment

வணிக வளாகம் கட்டுவதற்கான கட்டடத் திட்டத்திற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்ற தஞ்சாவூர் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநரை, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்குக் கட்டடத் திட்ட அனுமதி பெற முடிவு செய்தார். இதற்காக நாஞ்சிக்கோட்டை சாலையில் கல்லுக்குளம் அருகேயுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு கட்டடத் திட்ட அனுமதி கோரி சென்றார்.

இந்த அனுமதி கொடுப்பதற்கு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் ஆர். நாகேஸ்வரன் ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதைக் கொடுக்க விரும்பாத ஆனந்த், தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.

Advertisment

அவரது புகாரின் பேரில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுதுணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (25.02.2021) மாலை சென்று மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, ஆனந்திடமிருந்து ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய நாகேஸ்வரனை ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Bribe
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe