Advertisment

அக்.9- ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது! 

On October 9, DMK General Assembly meets!

Advertisment

வரும் அக்டோபர் 9- ஆம் தேதி அன்று தி.மு.க. பொதுக்குழு கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு வரும் அக்டோபர் 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள 'செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe