Advertisment

அக்.2 கிராம சபை கூட்டம்... முதல்வர் தேர்ந்தெடுத்த கிராமம்!

MK Stalin

தமிழகத்தில்கரோனாபாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைஅக்.31 ஆம் தேதி வரை நீட்டித்துநேற்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.கரோனாதொற்றுகாரணமாகக்கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவேகிராமசபைக்கூட்டங்கள் நடைபெறாதநிலையில்,கிராமசபைக்கூட்டங்களை நடத்த அனுமதி வேண்டும்எனப்பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில் வரும்அக்.2 காந்தியடிகள் பிறந்த நாளன்றுகிராமசபைக்கூட்டங்களைநடத்தத்தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி வரும்அக்.2 மதுரை மாவட்டம்பாப்பாபட்டிஊராட்சியில் நடைபெறும்கிராமசபைக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

Advertisment

grama saba mk stalin GANDHI JAYANTI
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe