/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/opsa43434343.jpg)
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில்கட்சிக்குத்தலைமை ஏற்க வருமாறு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில், 'தாய் தந்த தலைமகனே தலைமையேற்க வா...' என்ற வாசகங்களுடன் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்குஆதரவாகச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளனர். பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், மதுரை சாலை, விருதுநகர் சாலை உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும், இந்தசுவரொட்டிஅனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ops323211.jpg)
இதேபோல், வி.கே.சசிகலாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம்,மன்னார் குடியில்ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 'அம்மாவின் அடையாளமே! நிகழ்கால பரதனே! போன்ற வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை அ.தி.மு.க. தொண்டர்கள் கிழித்தெறிந்தனர். இதேபோன்று, சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில், 'அ.தி.மு.க. தொண்டரின் ஒற்றை இலக்கு, தி.மு.க.வை வீழ்த்துவது! கழகம் வாழ்வது யாரால்! கழகம் வீழ்ந்தது எவரால்! தொண்டர்களே சிந்தியுங்கள்!!' என்ற வாசகத்துடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் இரவோடுஇரவாகச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 'தலைமையேற்கதலைவா வா!! ஒற்றைத் தலைமை வேண்டும்!!' போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
ஒற்றைத் தலைமை வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள்வலியுறுத்திவரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்குஆதரவாகச்சுவரொட்டி யுத்தம் நடைபெற்று வருவது பேசும் பொருளாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)