Advertisment

ஒபிஎஸ் தொகுதியில்  பற்றி  எரியும் மலை  - அதிகாரிகளின் மெத்தனம்!

ops

துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் தான் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையின் மேற்கில் தான் போடி தொகுதி வருகிறது. அதாவது போடியில் இருந்து மூணாறு செல்லும் போடி மெட்டு வரை மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்து காணப்படும்.

Advertisment

இப்படிபட்ட மேற்கு தொடர்ச்சி மலையில்தான் விலை உயர்ந்த பல சாதிமரங்கள் மற்றும் புலி, சிறுத்தை, மான், யானை, காட்டு எருமை இப்படி பல வகையான விலங்குகள், குரங்குகள், பறவைகள், இருக்கிறது. அதுபோல் மூலிகைகளும் இப்பகுதியில் பரந்து விரிந்து கிடக்கிறது.

Advertisment

இந்த நிலையில் தான் கடந்த மூன்று நாட்களாக மூணாறு செல்லும் வழியான போடி மெட்டு பகுதியில் காட்டு தீ பரவி வனத்தவே அழித்து வருகிறது. அதன் மூலம் வனவிலங்குகள் மற்றும் பல சாதி மரங்களும் காற்றுதீக்கு இறையாகி வருகிறது.

இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் காதுக்கு எட்டவே உடனே போடி அருகே உள்ள முந்தல் கிராமத்திற்கு ஆர்.டி.ஒ.சென்னியப்பன் தலைமையில் அதிகாரிகளை உசிப்பி விட்டு போக சொன்னவர் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதுபோல் அதிகாரிகளும் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்தை காப்போம் என உறுதி மொழியும் எடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும் பரவி வரும் காற்று தீயை அணைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கவே கடைபிடித்து வருகிறார்கள் . இதனால் தொடந்து காட்டு தீ மேற்கு தொடர்ச்சி மலையில் எரிந்து கொண்டு தான் இருக்கிறதே தவிர அதை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கவே கடைபிடித்து வருகிறார்கள். இதனால் தொடந்து நான்காவது நாளாக காட்டு தீ எரிந்து வனத்தை அழித்து வருகிறது. இதை துணை முதல்வரான ஒபிஎஸ்சும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

authorities constituency madness mountain OBS
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe