ADVERTISEMENT

மக்கள் விரோத திட்டமான நியூட்ரினோ திட்டத்தை ஒபிஎஸ் அனுமதிக்கிறார்! டிடிவி பகீர் குற்றச்சாட்டு

10:35 AM May 07, 2018 | kalaimohan

துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரத்தில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டமான நியூட்ரினோவை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். அதற்கு ஆதரவாக வைகோ உள்பட அனைத்து எதிர் கட்சிகளும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கூட மத்திய மாநில அரசு கண்டு கொள்ள வில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தலைமையில் தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரம் அருகே உள்ள டி.புதுக்கோட்டை கிராமத்தில் இருக்கும் சோளக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுபோல் நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் கண்டன ஆர்ப்பாடத்திற்கு வந்த பலரும் கலைந்துசென்றனர்.

அப்படி இருந்தும் கூட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரனோ, தேனி மாவட்டமான பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டம் அமைந்தால் வருங்கால சந்ததியினரை பாதிக்கும். ஜெயலலிதா இருக்கும் வரை மக்கள் விரோத திட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இப்போழுது பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் பன்னீர்செல்வம் அவரது தொகுதியில் நியூட்ரினோவை அனுமதிக்கிறார். அவரது சந்ததியினரும் இங்கே தான் வாழவேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வேறு எங்காவது நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டு செல்லுங்கள். விவசாய பூமியான தேனி மாவட்டத்திற்கு இத்திட்டம் வேண்டாம் என்று பேசினார்.

ஆனால் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் ஏதும் எழுப்பப்படவில்லை. இதில், தங்கத்தமிழ்ச்செல்வன், கதிர்காமு, செந்தில்பாலாஜி, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற அனுமதியோடு நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இது என்பதால் பொட்டிபுரம் உட்பட அப்பகுதி கிராம மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், பெயர் அளவில் மட்டும் டிடிவி பேசி விட்டு போனதை கண்டு அப்பகுதி பெரும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT