
ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை எனத் தி.மு.க சார்பில்உயர்நீதிமன்றத்தில்அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய,மாநிலசுகாதாரத்துறை செயலர்கள் உட்பட 9 பேருக்குஎதிராக தி.மு.கவின் எம்.பி, டி.கே.எஸ் இளங்கோவன்தாக்கல் செய்தஇந்த அவமதிப்பு வழக்கு, விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவில், தமிழகசுகாதாரத்துறை செயலர்,மருத்துவச் சேவைகள் இயக்குநரைசேர்க்காமல் குழு அமைத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மத்திய, மாநில அரசுகள் மீறியுள்ளதாகவும் தி.மு.க குற்றஞ்சாட்டியுள்ளது.
Follow Us