ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை! 

O. Panneerselvam's health is stable, the hospital administration reported!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து, நேற்று (15/07/2022) காலையில் அவர் கரோனா பரிசோதனை செய்தார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓ.பன்னீர்செல்வம் நேற்று லேசான கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு வருகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

admk coronavirus hospital
இதையும் படியுங்கள்
Subscribe