/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1192.jpg)
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது.
இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே இருந்த எடப்பாடி பழனிசாமி பேனர்கள் கிழித்தெறிந்த நிலையில் அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் வாகனத்தில் வைத்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கட்சியின் அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)