Advertisment

"எப்போதும் நிதானமாகப் பேசிக் கூடியவர் ஓ. பன்னீர்செல்வம்" - டிடிவி தினகரன்!

publive-image

Advertisment

மருது சகோதரர்களின் 220வது குருபூஜையையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திருவுருவப் படங்களுக்கு அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிடிவி தினகரன், "தேர்தலில் வெற்றி, தோல்விகளைக் கண்டு துவண்டுவிடுபவர்கள் அல்ல அம்மாவின் பிள்ளைகள். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டில் உண்மையான அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார். ஓ. பன்னீர்செல்வம் எப்பொழுதுமே நிதானமாகத்தான் பேசுவார்; சரியாகத்தான் பேசியிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

AMMK PARTY pressmeet TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe