Published on 23/11/2021 | Edited on 23/11/2021

கடந்த மாதம் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பதிவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு எம்பிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொள்ள இயலவில்லை. அந்த நேரத்தில் அவரின் மனைவி இறந்ததை தொடர்ந்து அவரால் அந்த நிகழ்வில் பங்கேற்ற முடியாமல் போனது. இந்நிலையில், இன்று (23.11.2021) ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக ஓ. பன்னீர்செல்வம் அவரை சந்தித்துப் பேசினார்.