Advertisment

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் போட்டியிடும் வார்டில் சலசலப்பு... காரை சிறைப்பிடித்து தி.மு.க.வினர் போராட்டம்!

O. Panneer Selvam's brother is contesting in the ward.

தேனியில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் போட்டியிடும் வார்டில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி கார் ஒன்றை மடக்கி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 24வது வார்டில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது சகோதரர் சண்முகசுந்தரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வாக்குச்சேகரிப்பின் போது அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு சேலை மற்றும் வேட்டிகளை வழங்கியதாக தி.மு.க.வினர் கார் ஒன்றைச் சுற்றி வளைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த கார் ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு சகோதரரான ஓ.ராஜாவின் மகன் குகனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

Advertisment

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காரை தென்கரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதில் 20 சேலைகள் மற்றும் வேட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admk Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe