theni

Advertisment

திருவாரூரில் 21மாத நிலுவை தொகையை வழங்கிட வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர்.

திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி தெற்கு வீதி, அண்ணா சாலை, நேத்தாஜி சாலை, பேபி டாக்கீஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

முன்னதாக பேரணி தொடங்கு முன்பு கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ரூ9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது அமைப்பாளருக்கு ரூ5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த பேரணியின் போது சமையல் அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.