Nutrition organizer needs time to apply for chef jobs ...!

மாநிலத்தில் பல மாவட்டங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.உதாரணத்திற்குக்கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில்காலியாகஉள்ள சத்துணவு அமைப்பாளர் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களைநிரப்புவதற்குதகுதி உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுவதாகக்கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரசகாமூரிஅறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதன்படி சத்துணவு அமைப்பாளர்பணிக்குப்பொதுப்பிரிவினர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 21லிருந்து 40 வயதிற்குள் வயது வரம்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்.சி மக்கள், எட்டாம் வகுப்பு படிப்பு தகுதியும் 18 முதல் 40 வயதிற்குள் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சமையலர்பணியிடத்திற்குபொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் எட்டாம் வகுப்பு படிப்பும் 21 முதல் 40 வயதுக்குள்வயது வரம்புஇருக்கவேண்டும். ST மக்கள்,எழுதப்படிக்கத்தெரிந்திருந்தால் போதும். உதவியாளர்பணியிடத்திற்குப்பொதுப்பிரிவு மற்றும் SC மக்கள் ஐந்தாம் வகுப்பு படிப்பு இருந்தால் போதும். அதேபோல் ST மக்கள்எழுதப்படிக்கத்தெரிந்திருந்தால் போதும். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Advertisment

விண்ணப்பிக்கப்படும் காலி பணியிடத்திற்கு அவரவர்கள்வசிப்பிடத்தில் இருந்துமூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும். இதில் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்ளும் மாற்றுத்திறனாளிகள் 43 வயதிற்குள்ளும்இருக்க வேண்டும். நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும் இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களிலும் நகராட்சி அலுவலகங்களிலும் நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கப்படும் மையம்,கிராமப்பகுதியாக இருந்தால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓக்களிடமும்நகராட்சி பகுதியாக இருந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சிகமிஷனரிடமும்வரும் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்முகத் தேர்வு நடக்கும் நாள் விவரம் ஆகியவை கடிதங்கள் வாயிலாக விண்ணப்பித்தவிண்ணப்பதாரர்களுக்குத்தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, வயது, ஜாதி சான்றிதழ்,ரேஷன்கார்டு,இருப்பிடச் சான்றுகள், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் விதவை, கணவனால் கைவிடப்பட்டவராக இருந்தால் அதற்கான சான்றிதழ்களில் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற பல மாவட்டங்களில் மேற்படி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம் விண்ணப்பிக்கும் நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம், இந்த அறிவிப்பு 26ஆம் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி தேதி அக்டோபர் 1ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான தேதிக்கும் விண்ணப்பம்செய்திடக்கடைசி தேதியான 1ஆம் தேதிக்கும் இடையில் நான்கு நாட்களே உள்ளன.

அதில் சனி ஞாயிறு விடுமுறை நாளாக உள்ளதால் விண்ணப்பதாரர்கள்விண்ணப்பத்தைப்பூர்த்தி செய்து அதில் இணைப்பதற்கானசான்றுகளைப்பெறுவதற்கும் அதை நகலெடுக்கவும் அவைகளில்கெசட்டட்ரேங்கில்உள்ள அலுவலர்களிடம் சான்றொப்பம் வாங்குவதற்கும் காலதாமதமாகும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்டோபர் 1 என்று இருப்பதை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.