Skip to main content

ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.. கர்ப்பிணிப் பெண்களுக்கு மரக்கன்றுகள்! 

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Nutrition Awareness Program .. Saplings for Pregnant Women!

 

சிதம்பரம், கொற்றவன்குடி தெரு, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கீரப்பாளையம் வட்டார  குழந்தைகள் வளர்ச்சி மையம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கீரப்பாளையம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுடர்கொடி கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் இளம் பெண்கள், மாணவிகளுக்குப் பாரம்பரிய உணவான கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற நவ தானியங்கள், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் சத்துமாவில் செய்த பலவகையான உணவுகளின் சிறப்பு குறித்து விளக்கிக் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி, உதவித் தலைமையாசிரியர் இளஞ்செழியன், குழந்தைகள் திட்ட மேற்பார்வையாளர் இந்திரா, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம், திட்ட உதவியாளர் நர்மதா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதனை நிகழ்ச்சிக்கு வந்த கர்ப்பிணிப்பெண்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்